வீதி விபத்துக்கள் அண்மைக்காலமாக இப்பகுதியில் இடம்பெற்று வந்த நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை பாத்திமா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் பொது அமைப்புக்கள் மேற்கொண்ட முயற்சியினால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் வியாழக்கிழமை (18) ஆரம்பமானது.
இதே வேளை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று மற்றும் கல்முனை தெற்கு பகுதிகளில் வீதி சமிஞ்சை ஏலவே பொருத்தப்பட்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால தேவையாக இருந்த கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை , கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு முன்பாக பாதசாரி அறிவுறுத்தல் சமிஞ்சை விளக்கு பொருத்தும் பணியானது தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலதிக மாகாண பணிப்பாளர் கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் ஆகியோர் குறித்த வீீதி சமிஞ்சை விளக்கு பொறுத்தும் செயற்பாட்டை மேற்பார்வை செய்துள்ளனர்.
