இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்காவிட்டால் பட்டினிச்சாவே ஏற்படும்- சிவமோகன் எச்சரிக்கை



ன்று இந்த கொரோனா தாக்கத்தால் நடுத்தர வருமானக் குடும்பங்கள் அன்றாடம் வேலை செய்பவர்கள் மட்டுமல்ல பாரிய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் இதை மீட்டெடுப்பதற்கு தற்போதைய அரசு வார்த்தைகளால் மட்டும் மாயாஜாலம் காட்டி வருகிறதே தவிர அவசர செயற்படுத்தல் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை

என்பது வெளிப்படையாகத் தெரிகிறது 

கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிதியமைச்சின் செயலாளரால் நிறைவேற்றப்படவில்லை பொருளாதார மீட்டெடுப்பிற்காக பொது மக்களுக்கு உதவிகளைச் செய்ய அரசு தயாராக இல்லை என்பது பொது மக்களின் குற்றச்சாட்hக உள்ளது

சிறு விவசாயம் செய்பவர்கள் கூட தங்களது வருமானத்தை மீட்டெடுப்பதற்காக வங்கிகளை நாடும் பொழுது

அவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிகழ்வுகள்தான் நடந்து வருகிறது எனவே மக்கள் தங்களைத் தாங்களே மீட்டெடுத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்

பெரிய எதிர்பார்ப்புடன் ஒரு ஜனாதிபதியை உருவாக்கிய சிங்கள மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த பொருளாதார சுமை தலையில் பேரிடியாக விழுந்துள்ளது

லண்டன் நாட்டில் சகல கடை உரிமையாளர்களுக்கும் மாதாந்தம் இலங்கைப் பெருமதியின் படி பத்து லட்சம் ரூபாவை அங்குள்ள அரசு வழங்கியுள்ளது இந்த நிலையில் எமது பிரதெசத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் வியாபாரிக|ளுக்கு ஒரு ரூபாகூட போய்ச் சேரவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமே

எனவே இந்த அரசு இதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அப்படி எடுக்கத் தவறினால் பொதுமக்கள் அதற்கான சரியான பாடத்தை வாக்குச் சீட்டின் மூலம் புகட்டுவார்கள்

மேலும் சிறுபான்மையினர் மீதான இன அடக்குமுறையையும்
இராணுவ சிந்தனைகளையும் சிங்கள மக்களிடையே விதைத்து நீணடகாலத்திற்கு அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் காலம் மிக விரைவில் எற்படும்

விட்டுக் கொடுப்புக்கள் மூலம் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவைப் பெற்று நாட்டுக்குத் தேவையான தீர்மானங்களை எடுக்க வேண்டிய இந்த இக்கட்டான காலத்தில் சர்வாதிகார போக்காக தனிநபர் தீர்மானங்கள் பொருத்தமாக அமையாது

அனைத்துக்கும் மேலாக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிவில் நிர்வாகங்கள் இன்று சீர்குலைந்து போய் இருக்கின்றது அதனால் மக்கள் பெரும் பாதிப்பை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்த அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் தேர்தலை நோக்கிய நகர்வுகள் மிக விரைவில் சுருண்டு போய் விடும் என்று வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -