எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாச தலைமையிலான கட்சியுடன் இணைந்து களமிறங்குகிறது. அதேபோன்று அதாவுல்லா தலைமையிலான கட்சியும் அ.இ.ம. காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் அமைப்புக்கள் களமிறங்குகிறது. ஆனால் மொத்தமாக அம்பாரை மாவட்டத்தை ஏழு ஆசனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேர்தல் மாவட்டமாக இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் சி.மு.காங்கிரஸ் சார்ந்த அணி மூன்று ஆசனங்களைப் பெறவேண்டுமாக இருந்தால் நிச்சயமாக அம்பாரை மாவட்டத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் பரந்துபட்ட தனக்கென்றே தனது செல்வாக்கை வைத்துக் கொண்டிருக்கின்ற உதுமான்கன்டு நாபிர் அவர்களுடைய ஆதரவு கட்டாயம் தேவை மட்டுமல்ல அவரோடு களத்தில் இறங்கி களப்பணி செய்யுமானால் நிச்சயமாக மூன்று ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
அவ்வாறு களப்பணி செய்கின்றபோது பொதுஜன பெரமுனவுடைய வாக்கு வங்கி கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து பத்தாயிரத்துக்கு உட்படுத்தப்படும் அதேபோன்று சி.மு.காங்கிரசும், ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாச அணியும் சேர்ந்து ஒரு இலட்சத்து இருபத்தைந்துக்கும் முப்பதுக்கும் இடையிலான வாக்குகளை பெறக்கூடிய சூழ்நிலை இருக்கும்.அவ்வாறு பெறப்படும் சந்தர்ப்பத்தில் மூன்று ஆசனங்களைப் பெறக்கூடியதாக இருக்கும்.
இதில் சி.மு.காங்கிரஸினுடைய சாணக்கியம் வெல்லுமா அ.இ.ம.காங்கிரசினுடைய சாணக்கியம் வெல்லுமா? சிலவேளை அ.இ.ம.காங்கிரசுக்கு உதுமான்கண்டு நாபிர் அவர்கள் தனது ஆதரவை வழங்குமாக இருந்தால் அம்பாரை மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரசினுடைய இப்போதைய வேட்பாளர்களின் நிலையைப் பார்த்தால் 15000 க்கும் 20000 க்குமிடைப்பட்ட வாக்குகளைத்தான் எடுக்க முடியும். அதேபோன்று உதுமான்கண்டு நாபிர் நேரடியாக களத்தில் இறங்கி ஆதரவு வழங்குமாக இருந்தால் 40000 க்கும் 42000க்குமான வாக்குகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டு ஒரு ஆசனம் பெறக்கூடியதாக இருக்கும். ஆனால் உதுமான்கண்டு நாபிர் யாருக்கு ஆதரவு வழங்குவார். இதில் எந்த சாணக்கியம் வெல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு எடுகோளாக கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பாக சம்மாந்துறை சி.மு.காங்கிஸிக்கு நேரடியாக களப்பணி செய்யாவிட்டாலும் மு.காங்கிரஸிக்கு ஆதரவாக இருந்தமையினால் சம்மாந்துறைத் தொகுதியை மு.காங்கிரஸ் விகிதாசார ரீதியல் அதிக வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்தது என்பதும் நீங்கள் அறிந்த விடயம்.
அவ்வாறு உதுமானடகண்டு நாபிர்தனது ஆதரவை மு.காங்கிரசுற்கு வழங்காத பட்சத்தில் மு.காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் ஒரு அசனத்துக்கு மேல் எடுக்க முடியாது என்பது திண்ணமாக காணப்படுகிறது.
அவ்வாறு உதுமானடகண்டு நாபிர்தனது ஆதரவை மு.காங்கிரசுற்கு வழங்காத பட்சத்தில் மு.காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் ஒரு அசனத்துக்கு மேல் எடுக்க முடியாது என்பது திண்ணமாக காணப்படுகிறது.