நாங்கள் இன்று பூஜையிலே ஈடுபட்டாலும் மிகவும் துயரத்திற்கு மத்தியிலேயே ஈடுபட்டு வருகிறோம்.எங்களுடைய தலைவர் மறைந்து 30 நாட்கள் கடந்து விட்ட நிலையிலேயே அவரின் ஆத்ம சாந்திக்காக இன்று நாங்கள் ஒரு பிரார்த்தனையினை நடத்தினோம்.அது மட்டுமல்லாமல் அவரின் படத்தினை திரை நீக்கம் செய்து வைத்தோம்.அவர் மலையக மக்களுக்கு செய்த சேவைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வை நாங்கள் நடத்தியிருக்கின்றோம்.எதிர்காலத்தில் எமது சமூகம் சிறந்த முறையில் வாழ்வதற்கும் சகல உரிமைகளை பெறுவதற்கும் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் நல்லாசி என்றும் இருக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் வேட்பாளர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
மறைந்த தலைவர் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைந்து 30 நாட்கள் கடந்த நிலையில் அவருக்கு ஆத்ம சாந்தி வேண்டி நோர்வூட் போட்ரி ஸ்ரீ முத்தமாரியம்மன் தேவஸ்த்தானத்தில் விசேட பூஜை ஒன்று நேற்று (25) இரவு வேட்பாளர் கணபதி கணகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நீங்கள் அனைவரும் இணைந்து ஒழுங்கு செய்த இந்நிகழ்வானது அவரின் ஆத்மா சாந்தி மற்றும் அல்லாமல் மலையகத்தில் எதிர்காலத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஊந்து சக்தியாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படமும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டன.
இந்த பூஜை வழிபாடுகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸஸின் முக்கியஸத்தர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான தொழிலார்கள் கலந்து கொண்டனர்.
