சிறுத்தைகளின் நடமாற்றத்தினால் கொட்டகலை கிரிலஸ்பாம் மக்கள் பீதியில்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிரிலஸ்பாம் பகுதியில் இரவு வேளையில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாடுவதனால் பொது மக்கள் பெரும் பீதியில் வாழ்ந்து வருவதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகள் கவனமெடுத்து சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த தோட்ட பகுதியில் அண்மைக்காலமாக கோழிகளும் நாய்களும் காணாமல் போய் உள்ளன. ஆரம்பித்தில் மக்கள் கள்ளர்களால் கொண்டு செல்வதாக எண்ணி ஒரு சில வீடுகளில் சிசிடிவி கமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று (24) திகதி இரவு 9.35 மணியளவில் திடீரென கோழிகளின் சத்தம் கேட்டு வெளியில் வந்த போது கூடு திறந்திருந்தாகவும் அதனை தொடர்ந்து தங்கள் வீட்டில் பொருத்தப்பட்;டிருந்த சிசிடிவி கமாராவில் பார்த்த போது, இரண்டு சிறுத்தைகள் வருகை தருவதனையும் அதில் ஒரு சிறுத்தை கொழிக் கூண்டினை உடைத்து கொழியினை பிடித்து கொண்டு செல்வதும் பதிவாகியுள்ளன.
சிறுத்தைகள் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் 9 மணியளவில் மக்கள் நடமாற்றம் உள்ள வேளையில் சிறுத்தைகள் வருவதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளன.
இந்த சிறுத்தைகள்' காணரமாக தங்களுடைய உயிர்களுக்கும் தங்கள் பிள்ளைகளின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம். என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
எது எவ்வாறான போதிலம் மலையகப்பகுதியில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாற்றம் அதிகரித்துள்ளதனால் அவற்றின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளன.இதனால் பல சிறுத்கைகள் பொறிக்குள் சிக்குண்டு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மனித உயிர்களையும் சிறுத்தைகளின் உயிர்களையும் காப்பாற்ற வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -