பொதுத் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி


னாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவனால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்னை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுக்காமல் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக ஏகமனதாக அறிவித்தது.

எதிர்வரும் 20 ஆம் திகதி 2020 பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன..

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் கடந்த மே 18 ஆம் திகதி முதல் 10 நாட்களாக் பரிசீலனைகள் இடம்பெற்றன. இந்த நடவடிக்கை நேற்றையதினம் (01) நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து , இன்று (02) பிற்பகல் 3.00 மணிக்கு கூடிய உயர் நீதிமன்றம் தனது முடிவை அறிவித்தது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -