வெற்றி பெறாதவர்களுக்கும் சேவை செய்யாதாவர்களுக்கும் வாக்களிப்பதனால் எவ்வித பயனுமில்லை- எம்.உதயகுமார்

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

நுவரெலியா மாட்டத்தை பொறுத்த வரையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில்களின் போது தேர்தல் முடிவுகள் ஏனைய மாவட்டங்களை விட இந்த மாவட்டத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளன.அதற்கு காரணம் நுவரெலியா மாவட்ட மக்கள் தன்மானத்துடனும் தையிரியத்துடன் வாழ்வதனாலே கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு பல்வேறு அழுத்தங்கள் கொடுத்த போதிலும் தேர்தல் முடிவுகள் திரும்பி பார்க்க வைத்துள்ளன.இந்நிலையில் இம்முறை இந்த வாக்களை சிதறிடிப்பதற்காக பல்வேறு நபர்கள் இந்த தேர்தலில் வாக்கு கேட்கிறார்கள்.ஆகவே மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

 வெற்றிபெறாத சேவை செய்யாத எந்த ஒரு நபருக்கும் இந்த தேர்தலில் பொது மக்கள் வாக்களிக்க கூடாது. என தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

ஹட்டன் ஸ்ரதன் பகுதியில் நேற்று (26) திகதி மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் நாங்கள் ஒரு போது வாய் சொல்லில் வீரர்கள் அல்ல. கடந்த காலங்களில் சேவையாற்றி விட்டே இன்று வந்து வாக்கு கேட்கிறோம.; இந்த தோட்டத்தில் வாழும் மக்கள் எங்களிடம் இரண்டு வருடங்களுக்கு முன் இணைந்து கொண்டார்கள். அதற்கு முன் பல வருட காலமாக மற்றுமொரு கட்சியில் தான் இருந்தார்கள். அவர்கள் என்ன செய்தார்கள.; நாங்கள் வந்த பின்பு தான் இந்த தோட்டத்திற்கு குறுகிய காலத்தில் பல அபிவிருத்திகளை செய்து கொடுத்துள்ளோம். 

இவர்கள் இறுதி காலத்தில் வந்ததனால் தான் ஒரு சில தேவைகள் மாத்திரம் பூர்த்தி செய்ய முடிந்தது. இல்லாவிட்டால் இன்னும் பல மடங்கு செய்திருப்போம்.

ஆனால் இன்று ஒரு சிலர் எதனையும் செய்யாமல் அதுவும் செய்யாது தேர்தல் காலத்தில் மாத்திரம் வந்து பொய் வாக்குறுதிகளை மாத்திரம் கொடுத்து விட்டு உங்களிடம் வந்து வாக்குகளை கேட்பார்கள் இன்னும் சிலர் ஒரு சிலரின் பெயரை வைத்துக்கொண்டு வாக்குகளை கேட்பார்கள். ஆனால் நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.கடந்த காலங்களில் வௌ;வேறு கட்சிகள் வந்த போதெல்லாம் எமது மக்கள் தெளிவாக வாக்களித்திருந்தார்கள.; யாழ்பாணத்தில் கூட அன்னத்திற்கு பதிலாக கழுகுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் எமது மக்கள் அன்னம் சினத்திற்கு ஏனைய சின்னங்களுக்கு சரியாக தெரிவு செய்து வாக்களித்திருந்தார்கள். ஆகவே இந்த தேர்தலுடன் யானை சின்னமும் காணாமல் போய்விடும். ஆகவே எமது சேவையினை மேலும் விஸ்தரிப்பதற்கு சந்தர்ப்பத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும்.

இந்த தேர்தல் என்பது ஒரு கட்சி சார்ந்த தேர்தலோ அல்லது ஒரு வேட்பாளர் சார்ந்த தேர்தலோ அல்ல. இது ஒரு சமூகம் சார்ந்தது இதில் சமூகம் சார்ந்த சிந்தனை இருக்கு வேண்டும.; இதில் முக்கிய நோக்கும் எமது வாக்கு பலத்தனை இல்லாதொழிப்தே ஆகவே மக்கள் சிந்தித்து மிகவும் நிதானமாக வாக்களிக்க வேண்டும் இந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர்களான பழனி திகாம்பரம்,வே.ராதாகிருஸணன்,நானும் தொலை பேசி சின்னத்தில் போட்டியிடுகிறோம்.யார் நல்லவன் வல்லவன் என்று பார்த்து தொலை நோக்குடன் சிந்தித்து தொலைபேசிக்கு வாக்களிக்க வேண்டும். என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -