இதுதவிர இந்த மாவட்டங்களில் பலர் நிலச்சரிவால் படுகாயமடைந்துள்ளதாகவும், பலரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த 2 நாட்களாக பாரக் பள்ளத்தாக்கில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்தவுடன், மீட்பு படையினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!
இந்தியா- தெற்கு அசாமில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறைந்தது 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தெற்கு அசாமின் பாரக் பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டது. காச்சார் மாவட்டத்தில் 7 பேரும், ஹைலாக்கண்டி மாவட்டத்தில் 7 பேரும், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...