தேசிய மட்டத்தில் பல்துறை பட்டதாரிகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வலயத்தில் முன்னணி !!


நூருல் ஹுதா உமர்-
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பொறுப்பேற்று அடிப்படையில் கல்முனை வலயக்கல்வி பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள தரக் கணிப்பீட்டின் அடிப்படையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கலை பிரிவிலும் உயிரியல் விஞ்ஞான பிரிவிலும் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள 10 உயிரியல் விஞ்ஞான பாடசாலைகளில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி முதலாம் இடத்தை பெற்றுள்ளது. உயிரியல் விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 145 மாணவிகளின் 104 மாணவிகள் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன் (72%) சென்ற முறை Z புள்ளி அடிப்படையில் 5/6 மாணவிகள் மருத்துவ துறைக்கும் 70 க்கும் மேற்பட்ட மாணவிகள் வேறு பல துறைகளுக்கும் பல்கலைக்கழகம் நுழைய அதிக வாய்ப்புள்ளது.

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள 21 கலைப்பிரிவு கொண்ட பாடசாலைகளில் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி முதலாவது இடத்தினை பெற்றுள்ளது.கலைப்பிரிவில் மாவட்டத்தின் முதலாம் நிலையைபெற்றுள்ள அதே வேளை 113 மாணவிகளுள் 98 மாணவிகள் (87%) பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். சென்ற முறை Z புள்ளி அடிப்படையில் 49 மாணவிகள் பல்கலைக்கழகம் நுழைய அதிக வாய்ப்புள்ளதுடன் 7 மாணவிகள் சட்ட பீடம் நுழைவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

இம்முறையே முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட உயர்தர வரலாறு பாடத்தில் தோற்றிய 25 மாணவிகளுள் 12 மாணவிகள் A சித்தியை பெற்றதுடன் அனைத்து மாணவிகளும் சித்தியடைந்து 100 வீத சித்தியை உறுத்திப்படுத்தினர்.

வர்த்தகப் பிரிவில் கல்முனை வலையத்தில் உள்ள 12 பாடசாலைகளில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி இரண்டாவது இடத்தினையும் (தகவல்கள் அடிப்படையில் திருத்தப்பட வேண்டும்) பெற்றுள்ளது. வர்த்தக பிரிவில் 20 மாணவிகளில் மாவட்ட நிலை 4 உட்பட 19 மாணவிகள் (95%) பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன் சென்ற முறை Z புள்ளி அடிப்படையில் 12 மாணவிகள் பல்கலைக்கழகம் நுழைய அதிக வாய்ப்புள்ளது.

பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்முனை வலையத்தில் உள்ள 8 பாடசாலைகளில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி நான்காவது இடத்தினையும் பெற்றுள்ளது. பௌதீக விஞ்ஞன பிரிவில் 55 மாணவிகள் பரீடசைக்கு தோற்றியதுடன் 27 மாணவிகள் (49%) பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன் சென்ற முறை Z புள்ளி அடிப்படையில் இரு மாணவிகள் பொறியியல் பீடத்துக்கும் மற்றய அனைத்து மாணவிகளும் ஏனைய துறைகளுக்கும் பல்கலைக்கழகம் நுழைய அதிக வாய்ப்புள்ளது.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்முனை வலையத்தில் உள்ள 8 பாடசாலைகளில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி நான்காவது இடத்தினையும் பெற்றுள்ளது. அதேபோன்று உயிரியல் தொழிநுட்ப பிரிவில் பரீடசைக்கு தோற்றிய 36 மாணவிகளுள் 22 மாணவிகள் (61%) பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன் சென்ற முறை Z புள்ளி அடிப்படையில் 15 க்கும் அதிகமான மாணவிகள் பல்கலைக்கழகம் நுழைய அதிக வாய்ப்புள்ளது.

மொத்தமாக 270 மாணவிகள் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன், சுமார் 165 (இவ்வெண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் வாய்ய்ப்புக்கள் அதிகமுண்டு) மாணவிகள் நேரடியாக பல்வேறு துறைகளுக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு உள்ளமை அம்பாறை மாவட்டத்தில் பல்துறை பட்டதாரிகளை உருவாக்குவதில் இப்படசாலையின் வகிபாகம் ஈடு இணையற்றதாகும்.

இப்பேறுபேற்றுக்காக முன்னின்று உழைத்த அதிபர் யூ.எல்.எம். அமீன், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், உயர் தரப்பிரிவுக்கு பொறுப்பான அதிபர், பகுதித்தலைவர்கள், உயர் தர பிரிவு ஆசிரியர்கள், அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களாவர். இவ்வாறு வலயத்திலையே முன்னிலை வகிப்பதுடன் தேசிய ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் எமக்கு பெருமை சேர்த்து கொடுக்கும் எமது பாடசாலை இன்னும்பல மடங்கு முன்னேற அனைவரும் பிரார்த்திப்பதும் அதற்கான வழிவகைகளை செய்து கொடுப்பதும் தலையாய கடமையே தவிர திட்டமிட்டு ஓரங்கட்டுவது, மலினப்படுத்தப்படுவது ஆரோக்கியமான விடயமல்ல என கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கலைவர்த்தக பிரிவின் அரசறிவியல் மற்றும் இஸ்லாம் பாட ஆசிரியர் ஏ.எச்.சபீர் முஹம்மட் அறிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -