புனித நோன்புப் பெருநாளை வீடுகளிலேயே அமைதியாகக் கொண்டாடிய கிழக்கு முஸ்லிம்;.


பி.எம்.எம்.ஏ.காதர்-
புனித நோன்புப் பெருநாளை இன்று (24-05-2020)முஸ்லிம்கள் தங்கள் தங்கள் வீடுகளிலேயே அமைதியாகக் கொண்டாடினார்கள்.ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முஸ்லிம்கள் இவ்வருட புனித நோன்புப் பெருநாளை மிகவும் அமைதியாகவும்,மிகவும் எழிமையாகவும் வீடுகளிலேயே கொண்டாடினார்கள்.
பெருநாள் தொழுகையை குடும்பம் குடும்பமாக வீடுகளிலேயே தொழுது கொண்டார்கள்.ஒவ்வொரு வருடமும் பெருநாள் தொழுகையை திறந்த வெளிகளிலும்,பள்ளிவாசல்களிலும் தொழுவந்த முஸ்லிம்களுக்கு இவ்வருட பெருநாள் தொழுகையை வீடுகளில் தொழுதமை புதிய அனுபவமாகவும், குடும்பத்துடன் தொழுது கொண்ட மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பெருநாள் தொழுகையின் பின்னர் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி ஆறத்தழுவி மகிழ்ச்சிசைப் பகிர்ந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.ஆனால் இம்முறை கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடைமுறைப்படுத்திய சமூக இடைவெளியைப் பேணும் வகையில் அவற்றைத் தவிர்த்து அரசின் அறிவுறுத்தலைப் பின்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -