தியாக திருநாளான நோம்பு பெருநாளினை உலகெங்கும் வாழும் முஸ்லிம் மக்கள் இன்று வீடுகளில் மிக விமர்சையாக கொண்டாடினர்.


ஹட்டன் கே,சுந்தரலிங்கம் -

லகெங்கும் கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று (24) பள்ளிவாசல்களில் தொழுகைகள் இடம்பெறவில்லை.

மௌலவிகள் கேட்டுக்கொண்டதற்கமைய இன்று முஸ்லிம் மக்கள் தங்களது பெருநாள் தொழுகையினை தமது குடும்ப அங்கத்தவர்களுடன் தொழுகையில் ஈடுபட்டதுடன் பெருநாளினையும் மிக விமர்சையாக கொண்டாடினர்.

இதன் போது குடும்பத்தின் ஒருவர் தொழுகையினை மேற்கொள்ள ஏனையவர்கள் பெரியவர் சிறியவர்கள் என பாராமல் மிகவும் உணர்வு பூர்வமாக தொழுகையில் ஈடுபட்டனர்.

இதன் போது நாட்டுக்கும் உலக மக்களுக்கும் சாந்தி சமாதானம் பிறக்க வேண்டி விசேட பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இது குறித்து இவர்கள் கருத்து தெரிவிக்கைளில் அல்லஹா இன்று எங்களுக்கு மிகவும் அமைதியான முறையில் குடும்ப அங்கத்தவர்களுடன் பெருநாளினை கொண்டாட செய்துள்ளார.;

 மிகவும் மகிழ்ச்சியாக நாங்கள் இன்று இந்த பெருநாளினை குடும்பத்துடன் கொண்டாடுகின்றோம்.இந்த பெருநாளினை நாங்கள் அரசாங்கம் அறிவுறுத்தியதற்கமைய நாங்கள் இதனை கொண்டாடுகின்றோம். 

ஏiனைய மக்களிடமும் நாங்கள் கேட்டுக்கொள்வது வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தவரே பெருநாளினை கொண்டாட வேண்டும் எனவும் உலக முஸ்லிம் மற்றும் நாட்டு முஸ்லிம்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்தினை தெரிவிப்பதாகவும் இவர்கள் தெரவித்தனர்.

இதே நேரம் மலையக பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -