வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மீள வழங்கும் செயற்பாடு இன்று ஆரம்பம்


எம்.ஏ.முகமட்-
கொரோனா (கொவிட்19) அசாதாரண சூழ்நிலை நிமித்தம் வாகன அனுமதி பத்திரம் வழங்கும் நடைமுறை நாடு பூராகவும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.

மோட்டர் வாகன திணைக்களத்தின் தற்போதைய அறிவுறுத்தலின் படி வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மீள வழங்கும் செயற்பாடு இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக கிண்ணியா பிரேதச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தெரிவித்தார்.
அலுவலக வேலை நாட்களில் மு.ப.9மணி தொடக்கம் பி.ப.3 மணி வரையும் பொதுமக்கள் வாகன உத்தரவுப் பத்திரத்தை இங்கு பெற்றுக் கொள்ள முடியும்.
பிரதேச செயலகத்திற்கு சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் பொது மக்கள் முகக் கவசம் அணிதல்,கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுதல் போண்ற சுகாதார நடை முறைகளை பேணிக் கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -