இன்று நாடளாவிய ரீதியில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய் காரணமாக சுமார் ஒன்றரை மாதத்திற்கும் மேலாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட் அமுலில் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை மெல்ல மெல்ல இயக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின்கீழ் இன்று நாடளாவிய ரீதியில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த வகையில் அரச பணியாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் பயணிக்கும் வகையில் புகையிர சேவைகள் மற்றும் அரச பேரூந்து சேவைகளும் ஓரளவு இயங்க ஆரம்பித்தன. இந்த வகையில் அரச, மற்றும் தனியார் ஊழியர்கள் கடமைக்கு திரும்பும் வகையில் அலுவலகங்களுக்கு இன்று பயணித்தனர்.
கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாத போதிலும் அலுவலர்கள் புறக்கோட்டையில் அரச பேரூந்து நிலையத்தில் பயணிப்பதற்காக காத்திருந்து பேரூந்துகளில் சுகாதார முறைமையின் அடிப்படையில் சமுக இடைவெளிகளைப் பேணி தமது பயணங்களை மேற்கொண்டதைக் காண முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -