தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு!


பிரதேசசெயலாளர் கஜேந்திரன் வீடுதேடிச்சென்று வழங்கிவைப்பு.
காரைதீவு நிருபர் சகா-

திருக்கோவில் பிரதேசத்தில் தற்போது சுயதனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட 28 குடும்பங்களுக்கு திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் கிராமம் கிரமமாக வீடுதேடிச் சென்று உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்துவருகிறார்.
மிகவும் தூரத்திலுள்ள கிராமங்களென்றாலும் தானே நேரடியாகச்சென்று இப்பொதிகளை வழங்கிவைத்து வருவது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இதற்கான உலருணவு அனுசரணையை லண்டன் அகிலேசன் பவுண்டேசன் நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் அம்பாறை இணைப்பாளர் சோ.வினோஜ்குமார் சமுகசெயற்பாட்டாளர்களான கி.ஜெயசிறில் வி.ரி.சகாதேவராஜா தங்கவேலாயுதபுரம் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.புவன் உள்ளிட்டோரும் அங்குசென்றிருந்தனர்.
பாதைகள் மிகவும் மோசமாக மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ள அ.சகாயம் பி.அன்ரன் கே.சுதர்சன் எஸ்.ஜயந்தன் ஆகியோருக்கு நேற்று நேரடியாகச்சென்று பிரதேசசெயலாளர் பொதிகளை வழங்கிவைத்தார்.
மேலும் வினாயகபுரத்தில் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டோருக்கு இன்று மீதி பொதிகள் வழங்கிவைக்கப்படும் என திருக்கோவில் உதவி பிரதேசசெயலாளர் கந்தவனம் சதீஸ் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -