கிழக்கு மாகாணத்தில் கிணறுகள் வற்றுவதாக வரும் செய்தி தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை

பாறுக் ஷிஹான்-

கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயம் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.

தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் சனிக்கிழமை(16) இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லைஎனவும் இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயமாகும்.

இது போன்ற நிலைமைகள் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்டதாகவும் அதனால் அபாய நிலைமைகள் அனர்த்தங்கள் எதுவும் ஏற்படவில்லை இருந்த போதிலும் இது தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை.இது அனர்த்த நிலைமைகள் ஏற்படுவதற்கான நிகழ்வுகள் அல்ல என அவர் அறிவித்துள்ளார்.

எனவே மக்கள் வதந்திகளை பரப்பி அல்லது நம்பி இந்த செய்திகளை பரப்பாமல் இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.மேலும் இது அபாய நிலைமை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமல்ல. தற்பொழுது இலங்கையில் தாழமுக்க நிலை காணப்படுவதனால் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கடலில் அதிகமானஇ உயரமான கடல் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -