கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியான நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அழைத்து வருவதற்காக அதிமேதகு ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சி குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
இது தொடர்பாக சுகாதார துறையின் பங்களிப்புடன் இன்று விஷேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் தூதரகம்கள் ஊடாக நிர்க்கதிகளுக்குள்ளாகியுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு எனது முகநூல்வாயிலாக கோரி இருந்தோடு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இது குறித்து பேசியதன் பலனாக அவ்வாறான விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வ சந்திப்பு வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
