கலாநிதி சுக்ரியின் மறைவு கல்விச் சமூகத்திற்கு பேரிழப்பு.


ஜாமிஆ நளீமியாவினுடைய ஸ்தாபகராகவும், இறுதி மூச்சுவரை அக்கலாபீடத்தினுடைய அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவருமான கலாநிதி சுக்ரி அவர்களின் மறைவு முழு கல்வி சமூகதிற்கும் பேரிழப்பாக பார்க்கிறேன் என சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும் தேசிய காங்கிரஸ் திகாமடுள்ள மாவட்ட வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உயர் அரச துறை அதிகாரிகளை உருவாக்குவதில் சாதனை படைக்கும் ஜாமிஆ நளீமியாவை உருவாக்குவதிலே முழுமையாக நளீம் ஹாஜியார் அவர்களுடன் நின்று அதனை உருவாக்கி மிகச் சிறந்த கலாபீடமாக கல்வியிலும், சமூக ரீதியிலும் அந்தஸ்த்துள்ள ஒரு நிறுவனமாக மாற்றுவதிலே இரவு பகலாக பாடுபட்ட ஒருவர்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்திற்காகவும் நாம் அனைவரும் பிரார்த்திப்போம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -