மட்டக்களப்பில் கடந்த சில வாரங்களில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளதுஆதிப் அஹமட்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் கடந்த கலங்களைவிட கனிசமாகக் குறைந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 27 ஆந் திகதி தொடக்கம்; 2020 மே 01 ஆந் திகதி வரையும் 27 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ம் ஆண்டு ஏப்ரல் 27 ஆந் திகதி தொடக்கம் 2020 மே 01 ஆந் திகதி வரையும் 27 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

இந்த வாரம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான 14 டெங்கு நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அது போன்று ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 04 பேரும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 04 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேரும்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 2 பேரும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் ஒருவருமாக இனங் காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் வெல்லாவெளி, பட்டிப்பளை, கோரளைப்பற்று மத்தி, கிரான், வவுனதீவு, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் கடந்த சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார். மொத்தமாக கடந்தவாரம் 27 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

வழைச்சேனை பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -