காரைதீவு சகா-
கல்முனை தமிழ்க்கோட்டத்தில் தரம் 10க்கு மேற்பட்ட வகுப்புகளையுடைய பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடலொன்று இன்று(11)கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்றது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கலந்துரையாடலும் கருத்தரங்கும் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையில் இன்று(11)திங்கட்கிழமை நடைபெற்றது.
முகக்கவசம் அணிவதெப்படி? கைகளை சுத்தம் செய்வதெப்படி? என்பது தொடர்பாக பொதுச்சுகாதாரப்பரிசோதகர் செய்முறை விளக்கமளித்தார்.
கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சேவை நிருவாகத்திற்குட்பட்ட தரம் 10 ற்கு மேற்பட்ட வகுப்புக்களையுடைய பாடசாலை அதிபர்களுக்காக இன்று (11.05.2020) கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்றது.
இதில் கொரனா தடுப்பு நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக விபரிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு பற்சூத்தை ஏற்படுவதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பாகவும் பிராந்திய பல் வைத்திய நிபுணரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் மாஸ்க் அணியும் முறைகள் கைகள் கழுவும் அவசியம் முறைகள் தொடர்பாகவும் விபரிக்கப்பட்டன.
பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்றபோது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய கையேடுகளும் வைத்திய அதிகாரியினால் அதிபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
