விவசாயிகளுக்கான உலக வங்கி நிதியிலான அரசாங்கத்தின் திட்டத்தில் தவறிய மட்டக்களப்பு முயற்சியாளர்கள் திங்களன்று விண்ணப்பிக்கவும்


அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவசர வேண்டுகோள்
எஸ்.எம்.எம்.முர்ஷித்-
பெருந்தோட்டக் கைத் தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்அமைச்சு வறுமையான மக்கள் வாழும் மாவட்டங்களுக்குமுன்னுரிமை என்ற அடிப் படையில்அமுல்படுத்தும்நவீனதொழிநுட்பத்ததுடன் விவசாயநடவடிக்கைகளில் ஈடுபாடுள்ள விவசாயிகளுக்கான உலக வங்கி நிதியிலான அரசாங்கத் தின் பயனுள்ளதிட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந் தவர்கள் கூடிய பயன்பெறவில்லை
இவ்வாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இத்திட் டம்பற்றி கருத்து வெளியிடுகையில் கவலை தெரிவித்தார் இது பற்றி தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பத்ம ராஜா:- இக்குறையைப்போக்க எதிர்வரும் 1 8 ம்திகதி திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் பணிமனையில் விண் ணப்பங்களை சமர்பிக்க வேண்டுமென்றும் செவ்வாயன்று விசேட குழுவால் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவை பெருந்தோட்டக் கைத் தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்அமைச்சுக்குசமர்ப்பிக்கப்படுமென்றும் தெரிவித்தார் .
இது பற்றி தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா உலகவங்கி திட்டத்தில் நவீன தொழிநுட்பத் துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற தொழில் முயற்சி யாளர்கள், புதிதாக செயற்பட வுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கும் 5 0 வீதம்இலவச மானிய உதவியாகவும் 40வீதம்இலகுகடன்உதவியும் அரசாங் கத்தால்பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.
இந்த பயனுள்ளதிட்டத்தில்விவசாயம் சார் கழிவுப்பொருள்களும் தீர்வுகளும் ,கால்நடைவளர்ப்பு மற்றும் பால் உற்பத்திகளும் ,மீன்பிடி மற்றும் நீரியவள அலங்கார மீன்கள் ,சிறியரக விவசாயஉபகரனங்கள் ,வெட்டியபூக்கள், மற்றும் இனத்தொகுதி பொருட்கள், விவசாயம் சார்சக்திவலு தீர்வுகள், மூலிகைச்செடிகள் மற்றும் மருந்துவகைகள் ,பழவகைமற்றும் மரக்கறி வகைகள் ,உணவுமற்றும் மென்பானங்கள்களஞ்சியபடுத்தும் வசதிகள், சேதனவிவசாயம், சேதனவிவசாயம்போன்றவற்றுக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கமுடியுமென அறிவிக்கப் படுகிறது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -