நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையையடுத்து தியகல கரோலினா தோட்ட குடியிருப்பொன்றில் பெய்த கடும் மழை காரணமாக பாரிய கல் ஒன்றும் மண்மேடும் சரிந்து விழுந்துள்ளதால் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று(16) திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவ இடம்பெறும் போது வீட்டில் மூன்று பேர் இருந்துள்ளனர்.
வீட்டில் இந்தவர்கள் மழை அதிகமாக இருந்ததன் காரணமாக வீட்டில் அறையிலிருந்து வெளியில் சென்று விராந்தையில் உறங்கியதனால் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் மேற்கொணட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
வீட்டில் உள்ளவர்கள் இடிந்து விழுந்துள்ள அறைக்கு எதிர்புறமாக உறங்கி கொண்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை வட்டவளை பொலிசார் நேரடியாக வந்து பார்வை யிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அயலில் உள்ள வீடுகளில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை கிராம சேவகர் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.
