திருகோணமலை சீனக்குடா பிரதேசத்தில் பால் பண்ணைத் தொழிலாளர்கள் பாதிப்பு


எம்.ஏ.முகமட்-
திருகோணமலை பிரதேசத்தில் பசு பாலினை மூலதனமாகக் கொண்டு தயிர் மற்றும் வெண்ணெய், போன்றவற்றினை செய்யும் சிறு கைதொழிலாளர்கள் தற்பொழுது பாரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இவர்கள் பல கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று பாலினை பெற்று நாளாந்தம் விற்பனை செய்து அதில் வருகின்ற வருமானத்திலேயே தமது ஜீவனோபாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண கொவித் 19 வைரஸ் சூழ்நிலை காரணமாகவும் மற்றும் நிலவுகின்ற ஊரடங்கு சட்டம் காரணமாகவும் தற்பொழுது அன்றாட தொழில் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் திருகோணமலை சீனக்குடா வெள்ளைமணல் பிரதேசத்தைச் சேர்ந்த தயிர் உற்பத்தியாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் பொழுது தமக்கு எந்தவித முதலீட்டுத் தொகை இல்லாதபோது தமக்கு கிடைத்த 5, 000 ரூபாவினை மூலதனமாகக் கொண்டு பாலின் மூலமாக தயிர் மற்றும் வெண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக கூறினர்.

பால் எடுப்பதில் சிரமம் உள்ளதாகவும் அவ்வாறு பாலினை எடுத்து தயிர் கடைவாதனால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

சில சமயங்களில் பால் கெட்டுவிட்டால் தமது அன்றைய நாள் தொழில் முற்றாக இல்லாமல் போகக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன எனவும் தெரிவிக்கின்றனர்.

தயிருக்கோ வெண்ணெய் செய்கைக்கவோ உரிய விலை கிடைக்காததால் தமது அன்றாட தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு பண்ணை தொழிலாளர்களுக்காக வேண்டி இதுவரைக்கும் எவ்வித சலுகைகளும் நிவாரணங்களயோ வழங்கவில்லை என பண்ணை விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சிறுகைத் தொழிலாளர்களுக்கு பாலை விநியோகம் செய்கின்றவர்கள் முறையாக விநியோகம் செய்யததன் காரணமாக சிறு பண்ணைத் தொழிலாளர்கள் பாலினை தம்பலகாமம் சூரங்கல், வாண் எல போன்ற பிரதேசங்களில் பல மைல் தூரங்கள் அப்பால் சென்று தற்பொழுது பாலினை பெற்றுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -