வெசாக் போயா தினத்தினை முன்னிட்டு எபோஸ்லி தோட்டத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 34 பேர் உட்பட 500 பேருக்கு அன்னதானம்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
வெசாக் போயா தினத்தினை முன்னிட்டு எபோஸ்லி தோட்டத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 34 பேர் உட்பட 500 பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று (07) பகல் அப்போ அத் தோட்டத்தில் நடைபெற்றது.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோஸ்ட்லி தோட்டத்தில் கடந்த 2 ஆம் திகதி இரவு அத்தோட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டது. அந்த தொடர்பில் இருந்த குடியிருப்பில் இருந்த 14 வீடுகள் சேதமடைந்தன இதனால் இங்கு வாழ்ந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 34 பேர் தோட்டத்திலுள்ள கலாசார மண்டபம் ஒன்று தங்கவைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தங்க வைக்கப்பட்ட 34 பேருக்கு இன்றைய தினம் வெசாக் பவுர்ணமி தினம் என்பதனால் மலையக மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட 34 பேருக்கும் தோட்டத்தில் இருக்கின்ற ஏனைய 466 பேருக்கும் இன்றைய தினம் மதிய உணவினை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன
மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் புஷ்பா விஸ்வநாதன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்வு முன்னாள் அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் சிறியோர் பெரியோர் உட்பட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
இதே வேளை இத் தோட்டத்தில் பாதிப்புக்குள்ளான தொடர் குடியிருப்பினை தோட்ட நிர்வாகம் தற்போது சீர் செய்து வருகின்றது.குறித்த குடியிருப்பு சீர் செய்யும் முறை பாதிக்கப்பட்டவர்கள் கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகளை தோட்ட நிர்வாகமும் அம்பகமுவ பிரதேச இடர் முகாமைத்துவ மத்திய நிலையமும் செய்துவருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -