ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த பரீட்சையில் 19 பேர் ஒன்பது ஏ சித்தி,17 பாடங்களுக்கு 100 வீத மாணவர்கள்.சித்தி.


அட்டன் கே.சுந்தரலிங்கம்-
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலிருந்து 2019 நடைபெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் ஒன்பது ஏ சித்திகளை பெற்றுள்ளதாகவும் இதில் இருபது பாடங்களில் 17 பாடங்களுக்கு மாணவர்கள் 100 சதவீத சித்தியினை பெற்றுள்ளதாகவும் குறித்த பாடசாலையிலிருந்து தோற்றிய 162 மாணவர்களில் 162 பேரும் ஆறு பாடங்களில் சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆர் .ஸ்ரீதர் தெரிவித்தார்.
இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் எட்டு ஏ சித்தியினை 15 மாணவர்களும்,7 ஏ சித்தியினை 11 பேரும்,ஆறு ஏ சித்தியினை,15 மாணவர்களும்,ஐந்து ஏ சித்தியினை 09 மாணவர்களும்,04 ஏ சித்தியினை 16 மாணவர்களும்,03 ஏ சித்தியினை 20 மாணவர்களும்,02 சித்தியினை 18 மாணவர்களும் ஒரு ஏ சித்தியுடன் 21 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையிலிருந்து தோற்றிய பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஆங்கில பாடத்திற்கு 99.38 சதவீதமும்,விஞ்ஞானத்திற்கு 97.53 சதவீதமும்,கணிதத்திற்கு 98.15 சதவீதமும் பெற்றுக்கொள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் காரணமாக கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில் இவ்வாறான பெறுபேறுகளை பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்த மாணவர்களுக்கும் பாடஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றிகூற கடமைப்பட்டு இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -