நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள (சலூன்) சிகை அலங்கார நிலையங்கள் மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது


பாறுக் ஷிஹான்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் பணிப்புரைக்கமைய நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கள் சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்களின் ஊடாக பரவலாம் எனும் அச்சத்தின் காரணமாக பொது மக்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் பிரதேசத்தில் செயற்பட்டு சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்களிற்கு நேரில் சென்று (22)இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை செயற்பட முடியாதவாறு மூடிவிடுமாறு அறிவுறுத்தல் வழங்கியதுடன், சீல்வைக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -