கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் வலியுறுத்து
பொதுத்தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் விடுத்திருக்கின்றார். எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இவ்வறிவிப்பை அவர் விடுத்துள்ளார் என்பது வியப்பளிக்கின்றது இவ்வறிப்பு குறித்து அவர் மீள்பரீசிலனை நடத்தி தேர்தலை பின்தள்ளி வைக்கவேண்டும்.இவ்வாறு கோரிக்கை விடுகின்றார் கிழக்கு மாகான முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட்.;
இது குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
கொரானா அச்சம் மக்களைவிட்டு முற்றுமுழுதாக நீங்கவில்லை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட தினமே அதிகளவிலான தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஒரு பிரதேசத்தில் பரவும் தொற்று மற்றைய பிரதேசங்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலை இந்த குறுகிய கால இடைவெளிக்குள் நடத்துவதென்பது சாத்தியகூறானது அல்ல. தேர்தலுக்குரிய பணிகளை இக்காலவேளையில் மேற்கொள்ள முடியாது. இந்த நோய் தொற்றுக்கான சமுக கட்டுபாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்துவது என்பதும் சாத்தியப்படமுடியாத விடயம். எனவே இயல்புநிலை திரும்பி மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து தமது பணிகளை சாதாரணமாக மேற்கொள்ளும் வரையில் தேர்தலை தள்ளிப்போடுவது அவசியமானது.
சாதமான தருனத்தில் பெரும்பான்மை வெற்றியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்களை பலிக்கடாவாக்கும் ஏற்பாடுகளையும் உடன் நிறுத்த வேண்டும். ஊரடங்கைத் தளர்த்துதல், தேர்தலை நடத்துதல் போன்ற விடயங்களில் இப்போதைக்கு அவசரம் காட்டக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்த விரும்புகின்றேன்.
இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் சமூகங்களிடையே வேற்றுமைகளை வளர்க்கும் முயற்சிகளை திரைமறைவில் அரங்கேறிவருகின்றன. இது மனித உரிமை மீறல்க ளுக்கும் ஜனநாயக நடைமுறைகளுக்கும் பெரும் பாதி;ப்பை ஏற்படுத்தும் அம்சங்க ளகவே அமைந்திருக்கின்றன.
மக்கள் சாதாரண நிலைக்கு திரும்பவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றபோதும். நிலைமை இன்னும் அபாயமான கட்டத்தில் இருக்கின்றமையால் அவசரமான தீர்மானங்களை இப்போது மேற்கொள்வது மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு சாதாரணதர மக்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக நீடித்த தடைகள்- தடங்கல்கள் அவர்களது வாழ்க்கையை முற்றுமுழுதாகப் புரட்டிப்போட:;டு ள்ளது இதிலிருந்து மீள்வதற்கு குறிப்பிட்ட காலம் அவர்களுக்கு தேவைப்படு கின்றது. ஊரடங்கை தளர்த்தி தேர்தலை நடத்துவதால் மட்டும் இதற்கு தீர்வு கண்டுவிட முடியாது. அவர்களது வாழ்வியல் மீள்மேம்பாட்டுக்குத் தேவையான உதவி திட்டங்களை அரசு வழங்க வேண்டியது அவசியமாகின்றது.
எனவே மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாது. மக்களைப் பிரதிநிதித்துவ படுத்தும் கட்சிகளின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாது தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற நோக்கில் அரசு தேர்தலை நடத்தும் ஏற்பாட்டை மேற்கொள்ளக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்- என்றுள்ளது.