புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்கின்ற யாழ்ப்பாண அன்பரால் தமிழ் , முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொதி


அஸ்ஹர் இப்றாஹிம்-
மிழர் ஊடக மையத்தின் தலைவர் த. தர்மேந்திரா, காரைதீவு ஸ்ரீ சிவசக்தி முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலகர் கந்த. ஜீவாகரன் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு தவம் அறக்கட்டளை நிலையத்தால் உலர் உணவு நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்.ப்பாண மாவட்டத்தில் கன்பொல்லையை சேர்ந்த . டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற அரசியல், சமூக, பொதுநல, இலக்கிய, ஊடக செயற்பாட்டாளரான தவராசா சத்தியதாஸ் தந்தையின் பெயரில் அறக்கட்டளை நிலையம் அமைத்து சொந்த நிதியில் மிக நீண்ட காலமாக நாடு பூராவும் மனித நேய வேலை திட்டங்களை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மேற்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் நாட்டை தற்போது ஆக்கிரமித்து உள்ள கொரோனா தொற்று அச்ச சூழலில் வாழ்வாதாரம், வருமானம் ஆகியவற்றை இழந்து தவிக்கின்ற குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கி வருகின்றார்.
கடந்த வாரம் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொகை முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை நிவாரணமதக வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -