இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தனது கடமையில் விடாமுயற்சியுடனும் உறுதியுடனும் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த மர்ச் 11 முதல் ஏப்ரல் 10 வரையான காலப் பகுதியில் தனக்கு ஏற்படவுள்ள உயிராபத்தைக் கூட கருத்தில் கொள்ளாமல் கொரோனா வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபட்ட, குறித்த பதவிகளில் உள்ள ஒவ்வொரு அதிகாரிக்கும், ரூபா 5,000 வெகுமதியை வழங்க, பொலிஸ் மாஅதிபரினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையினை வழங்குவதற்கு, மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை, பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட அனைவரையும் கௌரவிக்க இன்று (11) மாலை 6.45 மணியளவில் தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
