கொவிட் 19 அசாதாராண நிலை காரணமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விசேட கொடுப்பனவுகளில் திருகோணமலை மாவட்டத்தில் சஹன பியவர மற்றும் சஹன அருனலு திட்டம் மூலம் கடந்த 10ம திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 54999 சமுர்த்தி பயனாளிகளுக்கு 274995000.00 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
இதன்படி சஹன பியவர திட்டம் மூலம் 36342 பேருக்கு 181710000.00ரூபாவும் சஹன அருனலு திட்டம் மூலம் 18657 பேருக்கு 93285000.00ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 62895 சமுர்த்தி பெறும் குடும்பங்கள் உள்ளதாகவும் இன்னும் 7896குடும்பங்களுக்கு குறித்த கொடுப்பனவு தொடராக 5000.00 என்றடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
