வீட்டுத் தோட்டத்திற்கு ரூபா 5 இலட்சம் வரையான கடனுதவி..

புதிய விரிவான (நவ சபிரி) கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4% வட்டியின் அடிப்படையில், 36 வகையான பயிர்களை பயிரிடுவதற்காக ரூபா 5 இலட்சம் வரையான கடன் வழங்கப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட ஜனாதிபதி
செயலணியினால் விடுக்கப்பட்டள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வங்கிகல் மூலம் வழங்கப்படவுள்ள இக்கடனின் மீளச் செலுத்தும்க காலம் 09 மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் திட்டத்திற்கு அமைவான பயிர்கள்
நெல், ளகாய், வெங்காயம், கௌபி, பாசிப்பயறு, உழுந்து, சோயா, குரக்கன், சோளம், நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, உருளைக்கிழங்கு, வற்றாளை, மரவள்ளி, பால்கிழங்கு, மரக்கறி, கத்தரிக்காய், வெண்டிக்காய், பீட்ரூட், போஞ்சி, கோவா, கரட், கறி மிளகாய், தக்காளி, லீக்ஸ், ராபு, நோகோல், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கை, இஞ்சி, கரும்பு

அத்துடன் சுபீட்சமான எதிர்காலம் திட்டத்தின் கீழான கடன்
நவ சபிரி கிராமிய கடன் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டமொன்றை அமைக்க உச்சபட்சமாக ரூபா 40 ஆயிரம் வரையான கடனுதவி 4% வட்டியில் அரச வங்கிகள் ஊடாக கடன் வழங்க மத்திய வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு அரசாங்கத்தின் மூலம் 5% வீத பங்களிப்பும், கடன் பெறுனரிடமிருந்து 4% வட்டியும் அறவிடப்படும் என, அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -