பொதுத் தேர்தலை நடத்தும் திகதி குறித்து தன்னால் எந்த முடிவையும் எடுக்க முடியாது- மஹிந்த தேசப்பிரிய

கொரோனாவால் நாட்டின் இயல்புநிலை மோசமடைந்து செல்கிறது. எனவே பொதுத் தேர்தலை நடத்தும் திகதி குறித்து தன்னால் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்டமான மே மாதம் 25 அல்லது 28ஆம் திகதிகளில் ஏதாவது தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்க்க முடியாது இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடியிலிருந்து நாடு இன்னமும் விடுபடவில்லை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் நாட்டின் இயல்பு நிலை மோசமடைந்துள்ளது.

எனினும் தேர்தலை மே மாத இறுதிக்குள் நடத்த முடியாது போனால் ஜூன் மாதம் 02ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூட முடியாது போகலாம். இது விடயத்தில் உரிய கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளோம்.

இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் உள்ளது. எனினும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவ்வாறாயின் மே மாத இறுதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு உரிய வாய்ப்பு ஒன்றை அரசு எதிர்பார்க்கின்றதா என்று எண்ண வேண்டியுள்ளது.

ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கக்கூடிய உத்தரவுக்கமைய தேர்தல் ஆணைக்குழு கூடி ஆராய்ந்து முடிவொன்றை எடுப்போம். உரிய காலக் கெடு முடியும் பட்சத்தில் தேர்தலை நடத்துவதில் பெரும் சட்டச் சிக்கல் ஏற்படலாம் என ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார இறுதிக்குள் ஆணைக்குழு ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து கலந்துரையாட எண்ணி இருப்பதாகவும் அடுத்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -