நிரந்தர வருமானம் அற்ற சுமார் காரைதீவு சாய்ந்தமருது 400 குடும்பங்களுக்கு சொர்ணம் குழுமம் உதவி



பாறுக் ஷிஹான்-
கொரோனா வைரஸ்  தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற காரைதீவு சாய்ந்தமருது தமிழ் பேசும் சுமார் 400 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் சமூக நேயப் பணியினை சொர்ணம் குழுமம் மேற்கொண்டது.

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பகுதில் 300 குடும்பங்களும் சாய்ந்தமருது பகுதியில் 100 குடும்பங்களுக்கும் வெள்ளிக்கிழமை(17) மாலை சொர்ணம் குழுமத்தின் ஸ்தாபகர் முத்துப்பிள்ளை விஸ்வநாதனின் வழிநடத்தலில் குறித்த நிவாரணப்பணிகள் இடம்பெற்றன.
இதன் போது சாய்ந்தமருது பகுதியில் இக்குழுமத்துடன் இணைந்து சிரேஸ்ட ஊடகவியலாளரும் கலைஞசருமான  ஏ.எல்.அன்சார் அவர்களது  ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிவாரண பொதியில் அரிசி சமன் டின் மா சீனி என்பன உள்ளடங்குகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -