ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் தரவலை பகுதியை சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் இன்று (09) தனிமை படுத்தல் காலம் நிறைவு பெற்று சுகாதார பிரிவினரால் விடுவிக்கப்பட்டன.
தரவலை பகுதியில் நடைபெற்ற தேவ ஆரதனையில் இந்திய மதபோதகர் ஒரு கலந்து கொண்டதன் காரணமாகவும்,குறித்த ஆரதனையில் கலந்து கொண்ட போதகர்களில் ஒரு சிலர் யாழ்பாணம் மற்றும் கொழும்பு பகுதிக்கு சென்று வந்ததன் காரணமாகவும் ஆரதனையினை தொடர்ந்து குறித்த போதகர் பலருடன் நெருங்கிய தொடர்பு கொண்டதனால் இவ்வாறு தொடர்பு வைத்திருந்த 65 பேர் இந்த நான்கு தோட்டங்களில் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டதனால் இவர்கள் யார்யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்று உறுதிப்படுத்த முடியாததன் காரணமாக இந்த பிரதேசத்தில் உள்ள ஒரு கிறிஸ்த்தவ ஆலயம் உட்பட தரவலை நான்கு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த நான்கு பகுதிகளையும் சேர்ந்த 200 குடும்பங்களில் உள்ள 800 வரை இன்று விடுவிக்கப்பட்டன.
குறித்த நபர்கள் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்பட்டதன் காரணமாக முன் எச்சரிக்கை கருதியே இவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டன.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடந்த நாட்களாக பொது சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸ் உத்தியோகஸத்தர்கள் ஆகியோர்களினது கண்காணிப்பினை தொடர்ந்து எவ்வித கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளும் காணப்படாதனால் இன்று (09) திகதி முதல் சமூகமயமாக்கப்பட்டுள்ளதாக ஆம்பகமுவ பிரதேச பொது சுகாதார உத்தியோகஸ்த்தர் காமதேவன் தெரிவித்தார்.
இது குறித்து பொது சுகாதார உத்தியோகஸ்த்தர் காமதேவன் மற்றும் கருத்து தெரிவிக்கையில்....
கடந்த 12 திகதி இந்த இடத்தில் நடைபெற்ற வழிபாடு ஒன்றின்போது இந்தியவிலிருந்து போதகர் ஒருவர் வந்திருந்ததாகவும் இந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் யாழ்பாணம் மற்றும் கொழும்பு சென்று வந்திருப்பதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் இந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் இந்த நான்கு தோட்டங்களிலும் வௌ;வேறு இடங்களில் மக்களோடு மக்;;களாக கலந்து கொண்டுள்ளதனால் யார் என்பது இனங்காணுவது கடினமாக இருந்தது.
இதன் இந்த நான்கு பிரதேசங்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டி ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று அவர்களது 14 நாட்கள் நிறைவு பெற்றுள்ளதுடன் எவருக்கு கடந்த காலங்களில் மேற்கொண்ட அவதானத்தின் போது கொரோனா தொற்றுக்குறிய அறிகுறிகள் எதுவும் காணப்படாதனால்; இவர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.ஆகவே இன்று ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதனால் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் சென்று தங்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வரலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து டிக்கோயா கிறிஸ்த்தவ ஆலயத்தின போதகர்; மணியன் ஜேசுதாசன் கருத்து தெரிவிக்கையில்.
கடந்த 11 ம் தகதி இந்தியவிலிருந்து போதகர் பாலசேகரன் வந்திருந்தார். அவர் எங்கள் ஆலயத்தில் நான்கு நாட்கள் கூட்டம் நடத்தினார். அதனை தொடர்ந்து அவருடன் கடந்த 16 திகதி யாழ்பாணம் சென்று மீண்டும் கொழுமபு; வந்து நான் இங்கு வந்தேன் அதற்காக எங்களை தனிமைப்படுத்தினார்கள். ஆனால் இந்தியவிலிருந்து வந்த மத போதகருக்கு எவ்வித கொரோனா தொற்றோ அல்லது வேறு எந்த நோயும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஊடகங்களில் தவறான செய்தியினை வெளியிட்டு எங்களது குடும்பம் அவமானம் படும் வகையில் முகநூல்; வழியாக கருத்துகளை பகிர்ந்திருந்தார்கள்.இது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது.
ஒரு சமயத்தையோ தனி நபர்களையோ உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதனை கேட்டுக்கொள்வதுடன் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடிக்கைகள் எடுப்பதற்கான நடவடிக்கை தற்போது ஆராய்ந்து வருவதாகவும்,இந்த தனிமைப்படுத்து செயப்பாட்டிக்கு ஒத்துழைத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.