முஸ்லிம் மகளிா் தொழில் மற்றும் அரச தனியாா் தொழில்களை ஆற்றுவோா்களின் சங்கத்தின் வருடாந்த கூட்டம்

அஸ்ரப் ஏ சமத்-
முஸ்லிம் பெண்களின் கல்வியலாளா்கள் ,தொழில் முறையிலான வா்த்தகர்கள் அமைப்பான முஸ்லிம் மகளிா் தொழில் மற்றும் அரச தனியாா் தொழில்களை ஆற்றுவோா்களின் சங்கத்தின் வருடாந்த கூட்டம் நேற்று 15 வெள்ளவத்தையில் உள்ள சானாஸ் உணவகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் கடந்த வருடத்தின் தலைவியாக ருஸ்னா மிகிலாா் கடமையாற்றினாா். புதிய தலைவியாக சானாஸ் ரவுப் கக்கீம் ஏக மனதாக தெரிபு செய்யப்பட்டு தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாா்.புதிய செயலாளா், மற்றும் நடப்பு வருட உத்தியோகத்தா்களும் தெரிபு நடைபெற்றது. பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாியின் ஓய்வு பெற்ற அதிபா் பழிலா சுரம்பதியும் ஆலோசகராகவும் கடமையாற்றி வருகின்றாா்

 இந் நிகழ்வுக்கு பிரதான உரை நிகழ்த்துவதற்காக நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சமுக மானிட பிரிவின் தலைவி கலாநிதி கிருனி அமரசுரிய உரை நிகழ்த்தினாா். அவரது உரையில் இந்த நாட்டில் க.பொ.உயா்தரத்தில் 80 வீதமாக பெண் பிள்ளைகளே சித்தியடைகின்றனா். சகல பல்கழைக்கழக அனுமதியிலும் 80 வீதமான பெண்களுக்கு அனுமதி கிடைக்கப்பெறுகின்றது. அதில் கலைப்பிரிவில் 75வீதமான பெண்கள் உயா்கல்வியைத் தொடா்கின்றனா். பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் வைத்தியத்துறையில் 50-50 பெண்கள் உள்ளனா். இந்த நாட்டில் உள்ள பல்கழைகழகத்திலும் பேராசிரியை , பீடாதிபதி உபவேந்தராகவும் யாழ்ப்பாணம், திறந்த பல்கலைக்கழகம் கொழும்பு பல்கழைக்கழகத்திலும் பெண்கள் உபவேந்தா்களாகவும் இருந்து வந்துள்ளனா். ஆனால் பெண்கள் பல்கழைக்கழக தொழிற் சங்கங்கள் 1 வீதமேனும் இல்லை. பாராளுமன்றத்தில் கூட பெண்களின் பிரநிதித்துவம் 5 வீதமாகும். இந்த நாட்டில் 55 வீதத்திற்கு மேற்பட்ட பெண்கள் உள்ளனா். அரச தனியாா் துறையிலும் 54 வீதமான பெண்களே தொழில்கள் செய்கின்றனா். அதிா்ஸ்டவசமாகவே அல்லது குடும்ப செல்வாக்கு அல்லது கணவன் இறந்ததும் பெண்கள் அரசியலில் உட்புகுந்த இந்த நாட்டின் தலைவிகளாக காலம் சென்ற சிறிமாவோ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோா் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகித்துள்ளாா்கள். ஆன்களை தொழில் செய்தாலும் தமது குழந்தைகளை காப்பது சமயலரை மற்றும் கணவனின் கருமங்களை ஆற்றும் செயல்களை திறம்பட ஆற்றி வருகின்றனா். எனக் அங்கு உரையாற்றினாா்
இவ் அமைப்பினால் பல் லைக்கழக மாணவிகள் உதபுதல், உயா் தர வகுப்பு மாணவிகளுக்கு புலமைப்பரிசில் திட்டம், ஆங்கிலம், தொழில் பயிற்சி வகுப்புக்களை நடாத்துதல், அனா்த்தம், மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு உதபுதல் போன்ற நடவடிக்கைகளை இவ் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -