ஊடகப்பிரிவு-முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்பத்னுவார பிரதேச செயலக பிரிவில் உள்ள வெலிஓயாவில் கைத்தொழில் பேட்டையை சிறு மற்றும் நடுத்தர கைதொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று (02) திறந்து வைத்தார்.
இந்த கைத்தொழில் பேட்டை மூலமாக இப்பகுதியில் வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் சுமார் 200,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1,020 பேருக்கு வேலை வழங்குவதற்காக நியூ யுனிவர்ஸ் கார்ப்பரேட் ஆடை (பிரைவேட்) லிமிடெட் (New Universe Corporate Clothing) மற்றும் ஸ்டைலிஷ் கேஷுவல் வேர் (பிரைவேட்) லிமிடெட் (Stylish Casual Ware) ரூ .272.5 மில்லியன் முதலீடு செய்துள்ளன.
இந்த நிகழ்வில் நியூ யுனிவர்ஸ் கார்ப்பரேட் ஆடை (தனியார்) லிமிடெட் (New Universe Corporate Clothing) தலைவர் அமி ன்த விமலசேனா. மற்றும் அமைச்சின் செயலாளர் ஜே..எ ரஞ்சித். அமைச்சரின் ஆலோசகர் சுதேஷ் நந்தசிறி, கை தொழில்துறை அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் விந்திகா பியரத்ன உட்பட பல முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -