வரலாற்று சிறப்பு மிக்க பன்மூர் தெப்பகுளம் அணைக்கட்டு திலகர் திறந்து வைத்தார்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

150 வருடம் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு அட்டன் பன்மூர் தெப்பகுளம் அணைக்கட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் திறந்த வைத்தார்
கடந்த மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கெடுப்பினால் உடைப்பெடுத்த பன்மூர் குளத்தினால் 150 மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்தனர்
இந் நிலையில் தொழிலாளர் தேசிய முன்னணியின் செனன் வட்டார அமைப்பாளர் விஜேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த திலகராஜ் உடைப்பெடுத்த அணைக்கட்டை புனரமைக்க கம்பெரலிய வேலைத்திட்டத்தினூடாக 40 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்தார்
பன்மூர் தோட்ட இந்துக்களால் வருடாந்தம் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த தெப்பதேர் விழா இடம்பெறும் மேற்குறிப்பிட்ட குளம் பன்மூர் தெப்பகுளம் என பெயர் சிறப்பு பெற்றது விளங்குகிறது
பன்மூர் தெப்பகுளம் அணைக்கட்டு புனரைமைக்ப்பட்டு மக்கள் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், தொ.தே. ச தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வன் உட்பட பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -