திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் சந்தியில் டிப்பர் வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சாரதியொருவரே காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (9) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மூதூரிலிருந்து கங்கை பகுதிக்கு மணல் ஏற்றச் சென்ற டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டையும் மீறி,சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காலக்கத்தினால் மின் கம்பத்தில் மோதியுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
