பஸ்களில் ஏற்றிச்செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கை வரையறுப்பு


மினுவாங்கொடை நிருபர்-
ஸ்களில் ஏற்றிச்செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கையை வரையறுப்பது தொடர்பில், இலங்கை போக்குவரத்துச் சபை அவதானம் செலுத்தியுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய, பஸ்களில் காணப்படும் ஆசனங்களுக்கு மேலதிகமாக குறைந்த அளவிலான பயணிகளை மாத்திரமே ஏற்றிச்செல்ல முடியும்.
இதன் காரணமாக, மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளர் ஏ. எச். பண்டுக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனைத்து சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் முகக் கவசங்களைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், இலங்கை போக்குவரத்துச் சபை இந்தத் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -