தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் விபரம்.


எப்.முபாரக் -
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 25ம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கில் மும்முரமாக தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதான கட்சிகள் அறிவித்து வரும் நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இரா.சம்பந்தன், ச.குகதாசன், முகுந்தன், நித்தியானந்தம், ஜீவரூபன், சுலோசனா ஜெயபாலன், சச்சிதானந்தம் ஆகியோரின் பெயர்களே குறித்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
மேலும் திருகோணமலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பெண் பேட்பாளர் களமிறங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -