கல்முனை அஷ் ஷுஹரா வித்தியாலயத்தின் புதிய அதிபராக செல்வி எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா நியமிக்கப்பட்டுள்ளார்
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இப் பாடசாலையின் அதிபராக இருந்த ஜனாப். ஏ. எல். அப்துல் கமால் அவர்கள் கடந்த செவ்வாயன்று (03.03.2020 )அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து பாடசாலையில் பிரதி அதிபாராக கடமை புரிந்த நிலையில் இவர் தனது கடமையினை நேற்று (04/03/2020) பொறுப்பெற்றார்.
கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக ஆரம்ப நியமனம் பெற்ற , இவ் பாடசாலையில் பதில்
அதிபராகவும்,பிரதியதிபராகவும் மற்றும் சம்மாந்துறை மகளிர் வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராக கடமையாற்றிவரார்.
இதன் போது கல்முனை மாநகர உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி. ஆரிகா காரியப்பர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததுடன் மேலும் நிகழ்வில் கல்முனை கல்வி வலய கோட்டக்கல்வி அதிகாரி பி.எம். பதுறுதீன் ,முன்னாள் அதிபர் . ஏ. எல். அப்துல் கமால், பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை
அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள் ,நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டு புதிய அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியென்பது குறிப்பிடத்தக்கது.

