இலங்கை வங்கியின் பொதுமுகாமையாளரை பதவி நீக்கியமைக்கு எதிராக பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளார்கள் இலங்கை வங்கி ஊழியர்கள்..!!



80 வருட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை வங்கியின் பொதுமுகாமையாளரை அரசியல் அழுத்தங்கள்காரணமாக பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியமையைக் கண்டித்தும், முறையற்ற வகையில்பொதுமுகாமையாளர் ஒருவரை நியமித்தமைக்கு எதிராகவும், எதிர்வரும் ஆறாம் திகதி அதாவது நாளைவெள்ளிக்கிழமை(06.03.2020) அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வங்கிஊழியர் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இதன் மூலம் நாளைய தினம் நாட்டிலுள்ள 637 கிளைகளைச் சேர்ந்த 10000 க்கு அதிகமான ஊழியர்கள் இந்த போராட்டத்தில் குதிக்கவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.நாட்டின் மிகப்பெரும் அரச வங்கியின் இப்போராட்டம் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதோடு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் காரணமாக வங்கியின் பெருமளவானவாடிக்கையாளர்களும் பாதிக்கப்படவுள்ளார்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -