முஸ்லீம் வர்த்தகர்நலன்புரி அமைப்பு அன்பளிப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பில் கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமைபுரியும் பணியாளர்களுக்கு முஸ்லீம் வர்த்தகர்நலன்புரி அமைப்பு அன்பளிப்பு.

மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் இயங்கிவரும் முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அமைப்பு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமைபுரியும் வைத்திய பணியாளர்களின் தியாகங்களையும், அவர்கள் இம்மாவட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக எடுத்துக் கொள்ளும் சிரத்தையினையும் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தின் வேண்டுகோளுக்கமைய இப்பணியாளர்களின் நலனுக்காக சிற்றுண்டி உணவு செலவுக்கென ரூபா 25 ஆயிரம் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளது.
இந்த அன்பளிப்பு நிதியினை மட்டக்களப்பு போதனா வைத்தியசா லை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கத்திடம் முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பினர் இன்று மதியம் கையளித்தனர்.
இந்த அன்பளிப்பினைக் கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர்நலன்புரி அமைப்பின் தலைவர், கே.எம்.எம்.கலீல், அங்கத்தவர். வர்த்தகர் எம்சீ.எம்.சியாட் மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் நிருவாகிகளான வர்த்தகர் எம்.எஸ்.எஸ்.பாயிஸ், கணக்காளர் கே.எம். சுகைர் பேஸ் இமாம் அல்ஹாபில் மௌலவி நியாஸ் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகி யிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -