வதந்திகளைப் பரப்புபவர்கள் மீதும் ஊரடங்கு விதிகளை மீறுகின்றவர்கள் மீது நடவடிக்கை


பாறுக் ஷிஹான்-
தந்திகளைப் பரப்புபவர்கள் மீதும் ஊரடங்கு விதிகளை மீறுகின்றவர்கள் மீதும் பாதுகாப்புத்தரப்பினர் எடுக்கும் எந்தத் தீர்மானங்களில் அகில இலங்கை உலமா சபையோ அம்பாறை மாவட்ட உலமா சபையோ தலையிடப் போவதில்லை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவரும் அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவருமான எஸ்.எச்.ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் .

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.

நாங்கள் எதிர்பார்ப்பது பொதுமக்கள் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதாகும். பொது மக்கள் ஊரடங்கு வேலையில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் போது அதற்கான பொறிமுறைகளுகக் கூடாகவே வழங்குங்கள்.உங்களுக்கு எதும் பிரச்சினைகள் ஏற்படுமானால் பொலிசார் மூலம் சட்ட ரீதியாக அணுகுங்கள் .ஆனால் தற்போது எமது பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது வதந்திகளை பரப்பி குளிர்காய சிலர் முயல்கின்றனர்.எனவே அதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -