இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் கிழக்கிற்கு பிரதேசம் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களை அதிகமாகக் கொண்ட பிரதேசம் ஆகும். நாளாந்த உழைப்பாளர்களை அதிகமாகக் கொண்ட கிராமங்கள் எமது பிரிவிற்குள் காணப்படுகின்றன. இந் நிலையில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையினால் எவராவது வீட்டில் உணவின்றி இருக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருக்கின்றது. இந் நிலையில் ஓர் குடும்பமோ நபரோ பட்டினி இருப்பார்கள் ஆயின் அது பற்றி அப் பிரதேச சனசமூக நிலையங்களுக்கே ஊரடங்கு நிலையில் முதலில் உண்மையினை அறியமுடியும்.
அவ்வாறு ஏற்படின் சனசமூக நிலையங்கள் தமது வைப்பில் உள்ள பணத்தில் அரசின் உரிய நிவாரண விநியோகம் கிடைப்பதற்கிடையில் தேவை ஏற்பட்டால் உடனடி நிவாரண உதவியினை நல்க முடியும் அதனை அனர்த்த சுழ்நிலையாக நாம் சிபாரிசு செய்கின்றோம்.
வலிகாமம் கிழக்கில் 125 வரையான சனசமூக நிலையங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சனசமூக நிலையங்கள் கடந்த காலத்தில் அரச அபிவிருத்தித் திட்டத்தில் ஒப்பந்தங்களைச் செய்து தமது சேமிப்பு கணக்கில் வைப்பினைக் கொண்டுள்ளன. அடிப்படையில் சனசமூக நிலையங்கள் பிரதேச சபையின் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் தமது செலவீனம் பற்றிய உறுப்படுத்தலுடனேயே வங்கியில் இருந்து பணத்தினைப் பெறமுடியும். ஊரடங்கு நிலையில் சனசமூக நிலைய உத்தியோகத்தர் ப. உதயசீலன் அவர்களை தொலைபேசியில் 0776597225 தொடர்பு கொண்டு உரிய ஒழுங்குபடுத்தல்களை அறிந்து அவரின் முனைப்பான ஒத்துழைப்பினைப் பெற்று குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்த முடியும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
