கொவிட் 19 காரணமாக உலகத்தில் வாழுகின்ற எல்லா மக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,அது மாத்திரமின்றி வரட்சி காரணமாகவும் ஊரடங்கு சட்டம் காரணமாகவும் தோட்டத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே தோட்டத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடமும்,கெபினட் கூட்டத்திலும் பேசியிருக்கின்றேன். அது நிச்சயமாக இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கும் அது மாத்திரமல்ல ஆயிரம் ரூபா சம்பளமும் கிடைக்கும்.என தோட்ட உட்கட்ட அமைப்பு சமூக வலுவூட்டல் அபிவிருத்தி அமைச்சர். ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்..
அவர் இன்று இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கொரோனா நோய் பரவுதை கட்டுப்படுத்துவதற்கா அரசாங்கம் பல்வேறு அறிவுறுத்தல்களை கூறிவருகிறது. ஆனால் இது எதனையும் எமது மக்கள் பின்படுத்துவதாக தெரியவில்லை. காரணம் இன்று ஊரடங்கும் சட்டம் தகர்த்தப்பட்ட போது பல நகரங்களில் சிறுபிள்ளைகளையும் அழைத்து வந்திருந்ததனை காணக்கூடியதாக இருந்தன. அரசாங்கம் தனித்தனியாக வருமாறு கூறியும் எமது மக்கள் குடும்பத்துடன் தான் வருகின்றனர். எனவே அரசாங்கம் என்ன தி;ட்டங்கள் கொண்டு வந்தாலும் பயனில்லை.நாம் கடைபிடிக்காவிட்டால் அல்லது நாம் அதனை பின்பற்றாவிட்டால்.ஆகவே மக்கள் இந்த நோய் பரவுவதிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டும்.
நான் மனிதவள தாபனத்திடம் கேட்டுள்ளேன் கைகழுவதற்கும் சவர்காரங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதுவும் மிக விரையில் உங்கள் தோட்டங்களுக்கு செய்து கொடுக்கப்படும் எனவே அரசாங்த்தின் அறிவுறுத்தல்களை கேட்டு நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
