இது சன நெரிசல்களை ஏற்படுத்தி கொரோனா நோய்க்காவிகளை பரப்புவதற்கான வாய்ப்பினை இன்னுமின்னும் அதிகரிக்கும் அச்சம் நிறைந்த செயல்பாடாகும்.
இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பாதுகாப்பானதும் சுத்தமான உணவுப் பொருட்களை உங்கள் காலடியில் கொண்டுவந்து சேர்க்கும் விஷேட செயல் திட்டதத்தை அரச பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொலிசாரின் அனுமதியுடன் நடமாடும் வியாபாரிகளுக்கான முன் அனுமதியினை பொலிசாரிடம் இருந்து பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுத்துள்ளேன்
அந்தவகையில் நடமாடும் மீன் வியாபாரிகள், மரக்கரி வியாபாரிகள், நடமாடும் மாலை உணவு விட்பனையாளர்கள், இறைச்சி வியாபாரிகள் துவிச்சக்கர வண்டிகள் மூலமாகவோ அல்லது சிறு வாகனங்கள் மூலமாகவோ பிரதான மற்றும் உள் வீதிகளில் தினமும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கின்ற நேரமாக இருந்தாலும் சரி, ஏனைய நேரங்களிலும் காலை, மாலை வேளைகளில் வீடுவீடாக சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பொருட்களை விற்கும் வாய்ப்பாகும்.
எனவே இவ் வியாபார நடவடிக்கையில் ஈடுபட விரும்பும் நடமாடும் வியாபாரிகள் பொலிசாரின் முன் அனுமதியை பெற்றுக்கொள்ள உடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறேன்.
உங்கள் வியாபாரத்தை நாளை முதல் நீங்கள் ஆரம்பிக்க முடியும்.
தொடர்புகளுக்கு:
0776339658
