அமெரிக்கா ஜனாதிபதி கூறிய பதிலால் அமெரிக்க மக்களுக்கு அச்சம்.




ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
மெரிக்க மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறைவே என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உருவான ‘கொரோனா’ வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுவரை 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 335 பேரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் ‘கொரோனாவின் பாதிப்பு குறைவே என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் கருத்து தெரிவிக்கும் போது, “ஒட்டு மொத்த உலகத்தை கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது குறைவே” என்றார்.
உலகநாடுகள் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி இந்த கருத்து அமெரிக்கா மக்களிடையே ஒரு வித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -