சீனாவில் பெண் தாதியர்கள் சந்திக்கும் வெளியே சொல்ல முடியாத வேதனைகள்!




ர்வதேச மகளிர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. பெண்களை மதிக்கும் மற்றும் கெளரவிக்கும் வகையில் கடைப்பிடிக்கப்படும் இத் தினத்தில் சில இடங்களில் பெண்களுக்கு அவமரியாதைகளும், வேதனைகளும் மிஞ்சியுள்ளன.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான வுஹானிலிருந்து சீனா முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3,070 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் பரவல் சீனாவின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பாரிய சவாலையும் விடுத்துள்ளது. கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதற்கான வைத்திய வேலையில் ஈடுபட்டுள்ள தாதியர்களில் பலர் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சோதனைகளை சந்தித்து வருகின்றனர். தாதி வேலையில் இருக்கும்பொழுது, அதற்கான உடைகளை அணிந்து கொள்ள வேண்டியுள்ளது. பாதுகாப்பு கவசம் போன்றவற்றை நாள் முழுவதும் போட்டு கொண்டு சாப்பிடவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ கூட முடியவில்லை. மாதவிடாய் காலத்தில் சனிட்டரி நப்கின்களை ( Sanitary napkin) மாற்ற கூட முடியாத ஒன்றாகவுள்ளது என பெயர் வெளியிட விருப்பமில்லாத பெண் தாதியர் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
இதே போன்று மாதவிடாய் காலம் தள்ளி போவதற்காக பிறப்பு கட்டுப்பாட்டிற்கான மாத்திரைகளும் தாதியர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. தாதியர்களுக்கு தலையில் மொட்டை அடித்து கொள்ள வலியுறுத்தப்படுகின்றனர். அனைத்து பிரதான பதவிகளில் ஆண்களே உள்ளனர் என தாதியர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுபோன்று எண்ணற்ற வைத்திய பெண் வேலையாளர்கள் தெரிவித்த வேதனைக்குரிய விடயங்களை சீனாவின் ஷங்காய் நகரில் வசிக்கும் ஜின்ஜிங் என்ற 24 வயதுடைய பெண், சீனாவின் டுவிட்டர் போன்ற ‘வெய்போ’ ( Weibo) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, தனிநபர் மற்றும் சில நிறுவனங்கள் சார்பில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சனிட்டரி பேட்கள் மற்றும் சனிட்டரி நப்கின்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் சில எதிர்ப்பு பதிவுகளும் வெளியாகின. மனித உயிர்களை கூட காக்க முடியாமல் உள்ளது. உங்களது கீழாடையில் ஏற்படும் எரிச்சல் உணர்வை பற்றி ஏன் கவலை கொள்கிறீர்கள்? என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

எனினும், நப்கின்கள் உள்ளிட்டவற்றை சில வைத்திய அதிகாரிகள் திருப்பியும் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் பற்றி போதிய விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை என ஜின்ஜிங் என்ற பெண் கூறியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் நாளை உலகளவில் கொண்டாடப்படவுள்ள நிலையில், சீனாவில் வைத்திய சேவையில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் வெளியே சொல்ல முடியாத வேதனைகளுடன் தங்களது வேலையை தொடர்ந்து செய்தே வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -