வெளிநாட்டு பிரஜைகள் தங்கும் விடுதி உரிமையாளருக்கு திடீர் சுகயீனம்


க.கிஷாந்தன்-
ண்டாரவளை, எல்ல பகுதியிலுள்ள விடுதியொன்றின் உரிமையாளர் திடீர் சுகயீனம் காரணமாக இன்று (22.03.2020) முற்பகல் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியில் வெளிநாட்டு பயணிகள் தங்குவார்கள் என்றும், இன்று கூட அங்கு இரண்டு அயர்லாந்து பிரஜைகள் தங்கியிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 10.30 மணியளவில் இவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சுகாதார பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை வழங்கினர்.
அதன்பின்னர் அவர் நோயாளர் காவு வண்டி ஊடாக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விடுதி உரிமையாளர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -