இடர் நிலையில் பிரதேச சபையின் அத்தியவசிய சேவைகள் அர்ப்பணிப்புடன் வழங்கப்படுகின்றன - தவிசாளர் நிரோஷ்



தொற்று இடர் மற்றும் ஊரடங்கு வேளைகளிலும் பிரதேச சபையின் சேவைகள் அர்ப்பணிப்புடன் வழங்கப்பட்டு வருகின்றன என பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் வழமையில் மேற்கொள்ளப்படும் குடிதண்ணீர் விநியோகம் உள்ளிட்ட சேவைகள் ஒழுங்குபடுதப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ் வகையில் நாள் ஒன்றிற்கு இருபாலை குடிநீர்த்தாங்கியில் இருந்து காலை மலை உள்ளடங்களாக 36 ஆயிரம் லீட்டர் குடிநீர் குழாய் மூலமாக கல்வியங்காடு இருபாலையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்டு வந்தது. மணித்தியாளங்கள் கணிப்பிடப்படாது வழங்கும் நீரையும் அதிகரித்துள்ளோம். ஆகவே பொறுப்புணர்வுடன் மக்கள் நீரைப்பயன்படுத்தினால் எல்லோருக்கும் அதேவேளை குடிநீர் விநியோக இடங்களில் மக்கள் குவியாது சகலரும் குடிதண்ணீரை பெற்றுக்கொள்ள முடியும். உழவு இயந்திர பவுசர்கள் வாயிலாகவும் ஊரணி, சிறுப்பிட்டி, இருபாலை பகுதிகளுக்கு குடிநீரை வழங்குகின்றோம்.

இதேவேளை கொரோனா தொற்று எற்படலாம் என்ற முன்எச்சரிக்கையாக தொற்றுநீக்கிகள் தெளிக்கப்படுகின்றன. சந்தை, சதொசா மக்கள் கடைகள், கூட்டுறவு கடைகள், பஸ் தரிப்பிடங்கள் போன்றவற்றிற்கு மருந்து விசிறியுள்ளோம். இதேபோன்று விழிப்புணர்வு முயற்சிகளிலும் காட்சிப்படுத்தல்கள் மற்றும் அறிவிப்புக்களைச் செய்துள்ளோம். மேலும் அவ்வப்போது பொது சுகாதர மருத்துவ அதிகாரிகளுடனும் தொற்று நோய் சம்பந்தப்பட்ட விடயம் ஆகையால் அறிவுறுத்தல்களை பெற்று செயற்பட்டு வருகின்றோம்.
ஊடரங்கு தளர்த்தப்படும் வேளைகளில் குடும்பத்தில் உருவர் சென்று அவசியமான தவர்க்க முடியாத பொருட்கொள்வனவுகளில் மட்டுமே ஈடுபடவேண்டும். அரசு, உள்ளுராட்சி மன்றங்கள் என்னதான் கட்டுப்பாடு விதித்தாலும் மக்கள் மனப்பூர்வமாக பொறுப்புணர்வுடன் செயற்படுவதிலேயே வெற்றி தங்கியுள்ளது.
இத் தொற்று விடயத்திலும ;மக்களின் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் விடயத்திலும் ஏற்கனவே உள்ள கடமைப்பொறுப்புக்களை பூர்த்தி செய்வதற்கும் அவ்வப்போது அவசியப்படும் சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கும் பிரதேச சபை அர்ப்பணிப்புடன் உள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தலைவர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -